கோலாலம்பூர்: எஸ்எம்இ கார்ப்பரேஷனின் உறுப்பினர் பதவியிலிருந்து அம்னோ தலைவர் மகள் நூருல்ஹிடாயா அகமட் சாஹிட் ஹமிடி விலகி உள்ளார்.
அம்னோ பொதுப் பேரவையில் பேராளர்கள் முடிவினை அடுத்து, அவரது முடிவு எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த விஷயத்தை நேற்றிரவு இன்ஸ்டாகிராம் பதிவில் நூருல்ஹிடாயா தெரிவித்தார். ஏப்ரல் 6 தேதியிட்ட உடனடி பதவி விலகல் கடிதம் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் வான் சுனைடி துவாங்கு ஜாபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“என்னை அவர்களாகவே நியமித்தார்கள். சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இப்போது யாருக்கு இப்போது தைரியம் இல்லை?,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி 4-ஆம் தேதி அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அம்னோ தலைமையின் உள் மோதல் மற்றும் அவரது தந்தை கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை காரணமாக நூருல்ஹிடாயா பதவி விலகியதாக நம்பப்படுகிறது.