கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்க அமைச்சரவையில் உள்ள அம்னோ தலைவர்களை கொள்கைகள் இல்லாதவர்கள் என்று அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்தார்.
அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலக மறுக்கும்போது, கட்சி அவ்வாறு செய்யும்படி அவர்களை வற்புறுத்துகிறது.
“நான் சொல்வதற்கு வருந்துகிறேன். அவர்களுக்கு கொள்கைகள் இல்லை, எந்த முன்னோடியும் இல்லை. அவர்கள் அமைச்சர் பதவிகளை வகிக்க விரும்புகிறார்கள். அம்னோ உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் என்னிடம் கேட்கும்போது, அவர்கள் பதவி விலகி அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நான் சொல்கிறேன்,” என்று ரசாலி மலேசிய இன்சைட் செய்தித்தளத்திட்ம கூறினார்.
அம்னோ அமைச்சர்கள் கட்சி எதிர்பார்த்த விசுவாசத்தைக் காட்டவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் (அம்னோ அமைச்சர்கள்) ஒழுக்கத்தைக் காட்டவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் சரியான விசுவாசத்தைக் காட்டவில்லை. எனவே நானாக இருந்தால், அவர்களை நீக்கிவிடுவேன். அவர்கள் திரும்பி வருவதை விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.