Home கலை உலகம் தமிழக அரசு மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்குகள்

தமிழக அரசு மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்குகள்

941
0
SHARE
Ad

சென்னை: மாரடைப்பு காரணமாக இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 17)அதிகாலை 4.35 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் காலமானார்.

இன்று மாலையே அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. விவேக்கின் இறுதிச் சடங்குகள் தமிழக அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது. தமிழ் நாடு அரசின் காவல் துறை மரியாதை குண்டுகள் முழங்க விவேக்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரின் நல்லுடல் தகனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தமிழ் நாடு அரசின் முடிவுக்கு தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியிருக்கிறது.

வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 15) கொவிட-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக் அதுகுறித்த விழிப்புணர்வு செய்தியையும் வழங்கியிருந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு, தடுப்பூசி காரணமாக ஏற்படவில்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.