Home நாடு அவசர காலத்திற்கு எதிராக மாமன்னர் அரண்மனையில் திரண்ட மகாதீர், எதிர்கட்சித் தலைவர்கள்

அவசர காலத்திற்கு எதிராக மாமன்னர் அரண்மனையில் திரண்ட மகாதீர், எதிர்கட்சித் தலைவர்கள்

491
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டில் அமுலில் இருக்கும் அவசர கால சட்டத்தை எதிர்க்கும் பொதுமக்களைப் பிரதிநிதிக்கும் எதிர்கட்சித் தலைவர்கள் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தலைமையில் இன்று பிற்பகலில் மாமன்னரின் அரண்மனை முன்னால் திரண்டனர்.

மாமன்னருடனான சந்திப்பு ஒன்றைக் கோரி அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

துன் மகாதீருடன் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரும் அமானா கட்சியின் தலைவருமான முகமட் சாபு, ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் அப்துல் சமாட்டும் இந்த ஆட்சேபக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

ஏறத்தாழ பிற்பகல் 3.10 மணியளவில் அவர்கள் மகஜர் ஒன்றையும் அரண்மனை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

அவசர காலத்தை முடிவுக்குக் கொண்டு வரப் போராடும் நடவடிக்கைக் குழுவின் சார்பில் இந்த மகஜர் வழங்கப்பட்டது.

இந்த குழுவில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.