Home Photo News மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டுக் கூட்டம் (படக் காட்சிகள்)

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டுக் கூட்டம் (படக் காட்சிகள்)

1097
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 58ஆவது ஆண்டுக் கூட்டமும், மலேசிய இலக்கியப் படைப்பாளர்கள் நால்வருக்கு தங்கப்பதக்கம் விருது வழங்கும் விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) காலை 9.30 மணியளவில் தொடங்கி மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தை மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான பெ.இராஜேந்திரன் தலைமையுரையாற்றினார். தனதுரையில், எழுத்தாளர் சங்கத்திற்கு உலக அளவிலும், இந்திய அளவிலும் அங்கீகாரமும் விருதுகளும் பெற்றுத் தர தான் மேற்கொண்ட முயற்சிகளையும், பாடுபட்டதையும் விவரித்தார்.

#TamilSchoolmychoice

தனக்கு தமிழக அரசின் சிறப்பு விருது கிடைத்தாலும், அந்த விருதளிப்பின்போது, பாராட்டு பெற்றது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்றும் இராஜேந்திரன் தெரிவித்தார்.

தனக்குக் கிடைத்த தமிழக விருதை சங்கத்திற்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் கிடைத்த விருதாகவே கருதுவதாகவும் இராஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.

டேவான் பகாசா டான் புஸ்தாகாவின் மூலம் தமிழ் படைப்பாளர்களுக்கு அங்கீகாரமும் மான்யமும் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் சரவணனை இராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.

ஆண்டுக் கூட்டத்தின் சிறப்பு அங்கமாக தங்க விருதளிப்பு விழா நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான விருதை எழுத்தாளர்கள் கு.தேவேந்திரன், எல்.எஸ்.மனோகரன், மு.சீரியநாதன், குமாரி கஸ்தூரி ஆகியோர் பெற்றனர். அவர்களுக்கு சரவணன் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: