Home நாடு வகுப்பறையில் பாலியல் பேச்சு: ஆசிரியர், மாணவியிடமிருந்து வாக்குமூலம்

வகுப்பறையில் பாலியல் பேச்சு: ஆசிரியர், மாணவியிடமிருந்து வாக்குமூலம்

1041
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வகுப்பறையில் பாலியல் தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்படும் நகைச்சுவை விவகாரத்தில் ஆசிரியர் மற்றும் மாணவரிடமிருந்து காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.

வாக்குமூலம் நேற்று எடுக்கப்பட்டதாகவும், குழந்தைகள் சட்டம் 2001- இன் பிரிவு 15- ன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், சுங்கை புலோ காவல் துறைத் தலைவர் ஷபாஅடன் அபுபக்கர் தெரிவித்தார்.

“அனைத்து சாட்சிகளும் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவார்கள்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த சனிக்கிழமையன்று, கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனது பள்ளியில் உடற்கல்வி மற்றும் சுகாதார வகுப்புகளின் போது மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து விவாதிக்கும்போது விரும்பத்தகாத வார்த்தைகள் கூறப்பட்டதாக 17 வயதான ஐன் ஹுஸ்னிசா சைபுல் நிஜாம் கூறினார்.

“இது முதலில் நல்ல விவகாரமாக இருந்தது. நாங்கள் பாலியல் துன்புறுத்தலில் எப்படி கவனித்துக் கொள்வது மற்றும் சுயமரியாதை பற்றி பேசினோம். அவர் சில நகைச்சுவைகளைச் செய்தார். முதலில் அது சாதாரணமாக இருந்தது, ஆனால் பின்னர் நகைச்சுவை வித்தியாசமாகவும் ஆபாசமாகவும் மாறியது.

“பின்னர் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து சட்டம் எவ்வாறு பாதுகாக்கிறது என்பதைப் பற்றி நாங்கள் பேசினோம். அதன்பிறகு அவர் ‘நீங்கள் கற்பழிக்க விரும்புகிறீர்கள் என்றால், 18 வயதிற்குட்பட்டவர்களை கற்பழிக்க வேண்டாம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களை கற்பழிக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்,” என்று அவர் கூறியிருந்தார்.

மாணவியின் தந்தை சைபுல் நிஜாம் அப்துல் வஹாபும் காவல் துறையில் புகார் அறிக்கை ஒன்றை பதிவு செய்தார்.