Home இந்தியா முதலமைச்சர் பதவியேற்றதும் கோபாலபுரம் இல்லம் வந்த ஸ்டாலின்!

முதலமைச்சர் பதவியேற்றதும் கோபாலபுரம் இல்லம் வந்த ஸ்டாலின்!

533
0
SHARE
Ad

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதற்குப் பின்னர் உடனடியாக தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லமும், தான் பிறந்து வளர்ந்த இல்லமுமான கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தார்.

அங்கு தனது தந்தையாரின் உருவப் படத்தின் முன் நின்று வணங்கி நல்லாசி பெற்றுக் கொண்ட பின்னர் தனது தாயார் தயாளு அம்மையாரிடம் ஆசீர்வாதம் பெற்றார் ஸ்டாலின்.

அப்போது ஸ்டாலின் கண்கலங்கினார்.

#TamilSchoolmychoice

கோபாலபுரம் இல்லத்தில் அவரின் குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். அங்கு அவரின் சகோதரி செல்வி முன்னின்று அவரை வரவேற்றார்.

கோபாலபுரத்திலிருந்து புறப்பட்டு அடுத்து அவர் சென்னை மரினா கடற்கரைக்கு சென்று தனது தந்தையாரின் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.