Home இந்தியா கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

567
0
SHARE
Ad

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதற்குப் பின்னர் உடனடியாக தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லமும், தான் பிறந்து வளர்ந்த இல்லமுமான கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தார்.

அதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரத்திலிருந்து புறப்பட்டு சென்னை மரினா கடற்கரைக்கு சென்று தனது தந்தையாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்திய பின்னர், பெரியார் நினைவிடம் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் மிகுந்த முக்கியத்துவம் வகித்தவருமானா பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்திற்கு சென்றார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்து பேராசிரியரின் இல்லம் சென்று அவரின் குடும்பத்தினரிடம் நல்லாசி பெற்றார் ஸ்டாலின்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கருணாநிதியின் இரண்டாவது மனைவியும், கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளைச் சந்திக்க சி.ஐ.டி காலனியில் உள்ள அவரின் இல்லத்திற்கு சென்றார்.

கருணாநிதி அவரின் வாழ்நாளின்போது பெரும்பாலும் தங்கியிருந்த இல்லமாக சி.ஐ.டி காலனியில் உள்ள இராஜாத்தி அம்மாளின் இல்லம் திகழ்ந்தது.

பதவியேற்றது முதல் மிக முக்கியமான இடங்களுக்கு வருகை தந்த ஸ்டாலினின் நிகழ்ச்சி நிரல் அனைத்துத் தரப்பினரையும் கவர்வதாக அமைந்திருக்கிறது.

இறுதியாக, தமிழக அரசு செயலகம் செல்லும் ஸ்டாலின் அங்கு சில முக்கியக் கோப்புகளில் கையெழுத்திடவுள்ளார்.

பிற்பகல் 4.00 மணிக்கு தமிழ் நாடு அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமையேற்கவுள்ளார்.