Home நாடு கொவிட்-19 : ஒரு நாளில் 27 மரணங்கள் – புதிய தொற்றுகள் 4,855

கொவிட்-19 : ஒரு நாளில் 27 மரணங்கள் – புதிய தொற்றுகள் 4,855

604
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர் : நேற்று வியாழக்கிழமை (மே 13) வரையிலான ஒருநாளில்  புதிய உச்சமாக 4,855 கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கும் நிலையில் 27 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

இதற்கு முன்னர் ஜனவரி 31-ஆம் தேதி 5,298 தொற்றுகள் பதிவாயின. இதுவே  மலேசிய வரலாற்றில் மிக அதிகபட்ச தொற்றுகளின் எண்ணிக்கையாகும்.

கடந்த ஒரு வார காலத்தில் 4 முறை தொற்றுகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியிருக்கின்றது.

#TamilSchoolmychoice

4,855 புதிய தொற்றுகளில் 3 மட்டுமே வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டதாகும். மற்ற 4,852 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும்.

நேற்றைய புதிய தொற்றுகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 458,077 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 3,347 ஆக இருந்தது. இதனைத் தொடர்ந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 414,707 ஆக உயர்ந்தது.

மரண எண்ணிக்கை 27 ஆக பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 1,788 ஆக உயர்ந்திருக்கிறது.

தற்போது நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 41,582 ஆகும். இவர்களில் 481 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 247 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

மாநில வாரியான தொற்றுகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

சிலாங்கூர் (1783)
கோலாலம்பூர் (521)
ஜோகூர் (467)
பினாங்கு (395)
சரவாக் (395)
கிளந்தான் (339)
பேராக் (302)
கெடா (193)
திரெங்கானு (148)
நெகிரி செம்பிலான் (100)
சபா (76)
மலாக்கா (67)
பகாங் (56)
புத்ரா ஜெயா (9)
லாபுவான் (4)
பெர்லிஸ் (0)