Home 13வது பொதுத் தேர்தல் “அப்துல் கனி ஒத்மானுக்கு வாக்களியுங்கள்” – கேலாங் பாத்தா நடப்பு ம.சீ.ச தலைவர் உருக்கம்!

“அப்துல் கனி ஒத்மானுக்கு வாக்களியுங்கள்” – கேலாங் பாத்தா நடப்பு ம.சீ.ச தலைவர் உருக்கம்!

666
0
SHARE
Ad

470x275x2898420aa06139bfd108a2fe72a2f040.jpg.pagespeed.ic.3xpscmgfxm

ஜோகூர், ஏப்ரல் 19 – வரும் பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில், தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிடவிருக்கும் அப்துல் கனி ஒத்மானுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்று தனது ஆதரவாளர்களை, அத்தொகுதி ம.சீ.ச கட்சியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஜேசன் டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லாதது குறித்து கடும் அதிருப்தியில் இருந்த ஜேசன் டோ, அதற்குப் பிறகு நடந்த கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று தனது தொகுதி மக்களைச் சந்தித்து மிகவும் உருக்கமான முறையில் பேசிய ஜேடன்,  தான் அரசியலை விட்டு விலகப் போவதாகவும், இருப்பினும் தனது தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய நிறைய வழிகள் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், “தேசிய முன்னணி என்னைப் புறக்கணித்தது மிகவும் வேதனையளிக்கிறது. பலர் என்னை சுயேட்சையாகக் களமிறங்கச் சொல்கின்றனர். ஆனால் தேசிய முன்னணியைத் தவிர அரசியலில் எனக்கு வேறு பாதை கிடையாது. எனவே அனைவரும் கனிக்கு வாக்களித்து அவரை வெற்றியடையச் செய்யுங்கள்” என்று ஜேடன் தெரிவித்தார்.

தேசிய முன்னணி கடந்த சில நாட்களுக்கு முன், ஜோகூர் மாநில நடப்பு மந்திரி பெசாரான அப்துல் கனி ஒத்மான், ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை எதிர்த்து கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.