Home நாடு எல்ஆர்டி விபத்து: ஓட்டுனர் தவறான வழியில் சென்றார்!

எல்ஆர்டி விபத்து: ஓட்டுனர் தவறான வழியில் சென்றார்!

607
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பயணிகள் இல்லாத எல்ஆர்டி இரயில், 213 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு இரயிலுடன் நேருக்கு நேர் மோதிய சம்பவம், ஓட்டுனர் தவறான திசையில் சென்றதால் ஏற்பட்டது என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறினார்.

நேற்று இரவு நடந்த சம்பவத்திற்கு மனித தவறே காரணம் என்று முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன என்று வீ கூறினார். இதன் விளைவாக 47 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.

இரயில் எண் 40- இன் ரயில் ஓட்டுநர் சரியான நோக்குநிலையைப் பின்பற்றத் தவறிவிட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பயணிகள் இல்லாத இரயில் ஆரம்பத்தில் தானாகவே இயக்கப்பட்டது. இது கம்போங் பாரு நிலையத்திலிருந்து தெற்கே டாங் வாங்கி நிலையத்தை நோக்கிச் சென்றது. இருப்பினும், தொழில்நுட்ப சிக்கலை சந்தித்ததால், அது மனித கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்று அவர் கூறினார்.