Home நாடு 1எம்டிபி: நஜிப் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

1எம்டிபி: நஜிப் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

559
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கடந்த வாரம் அவர் மேற்கொண்ட கண் அறுவை சிகிச்சையில் இருந்து இன்னும் மீளவில்லை என்பதால், இன்று மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்ட 1எம்டிபி ஊழல் வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா, நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவெராவிடம், தனது கட்சிக்காரர் அறுவை சிகிச்சையிலிருந்து இன்னும் மீளவில்லை என்று தெரிவித்தார்.

“மேலும் ஓய்வெடுக்க அவரது மருத்துவர் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார். கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் குறைந்துவிட்டது, ஆனால் வீக்கம் மற்றும் சிவத்தல் இன்னும் இருக்கிறது. நஜிப் மருத்துவரை அணுகியுள்ளார், அதன்படி ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுறுத்தினார். அவர் நாளை மீண்டும் தனது மருத்துவரை சந்திப்பார், ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்க செக்குவெரா அனுமதித்தார். மேலும் கொவிட் -19 நடைமுறைகளுக்கு இணங்க நீதிமன்றம் ஆதரவாளர்களில் சிலரை மட்டுமே நீதிமன்ற அறையில் இருப்பதை உறுதி செய்ய அரசு மற்றும் தற்காப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டார்.