Home நாடு 5,000-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்

5,000-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்

416
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 114 பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 5,867 ஊடகப் பணியாளர்கள் கொவிட்-19 தடுப்பூசி ஊசி பெறுவார்கள் என்று தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட முன்னணி பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு முடிவு செய்ததாக அவர் கூறினார்.

“சிஐடிஎப் அவர்களின் விவரங்களைப் பெற்றவுடன் கூடிய விரைவில் நியமனங்கள் வழங்கப்படும்,” என்று அவர் சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபாவுடன் நடத்திய ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.