Home நாடு சபா: இரு முறை தடுப்பூசி பெற்றவருக்கு கொவிட்-19 தொற்று

சபா: இரு முறை தடுப்பூசி பெற்றவருக்கு கொவிட்-19 தொற்று

559
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கடந்த மார்ச் மாதத்தில் இரண்டு முறை தடுப்பூசி பெற்றுக் கொண்ட 53 வயதுடைய ஒரு பெண், சபாவில் புதிய தொற்று குழு ஏற்பட காரணமாக இருந்துள்ளதாக மாநில ஊராட்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் மாசிடி மஞ்சுன் தெரிவித்தார்.

நோன்பு பெருநாள் கொண்டாட்டங்களின் போது தாவாவில் உள்ள ரங்கு கிராமத் தொற்றுக் குழு தூண்டப்பட்டது. மேலும் நெருங்கிய தொடர்புகள் மற்றும் சமூக தொடர்புகளை பரிசோதனை செய்ததன் அடிப்படையில், மேலும் 17 சம்பவங்கள் மொத்தம் 18 தொற்றுகளை உருவாக்கியது கண்டறியப்பட்டது.

“மே 15 முதல் அந்தப் பெண்ணுக்கு அறிகுறிகள் இருந்தன. பின்னர் அறிகுறி பரிசோதனையின் விளைவாக மே 20 அன்று தாவாவ் கிளினிக்கில் தொற்று உறுதி செய்யப்பட்டது. பூர்வாங்க விசாரணைகளின் அடிப்படையில், மே 13 அன்று அப்பெண்ணின் வீட்டிற்கு வந்தவரிடமிருந்து தொற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

“சம்பந்தப்பட்ட நபர் மே 22 அன்று தொற்றுக்கு ஆளானதாகக் கண்டறியப்படுவதற்கு முன்னர், தாமான் தேசா ரங்குவில் உள்ள மூன்று வீடுகளுக்கும், கம்போங் ஜாவா தாவாவில் உள்ள வீட்டிற்கும் சென்றுள்ளார். நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன, ” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.