Home உலகம் கொவிட்-19: ஒலிம்பிக் தொடங்குவதற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஊரடங்கு அமல்

கொவிட்-19: ஒலிம்பிக் தொடங்குவதற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஊரடங்கு அமல்

663
0
SHARE
Ad

தோக்கியோ: தோக்கியோ மற்றும் பிற ஒன்பது நகரங்களில் கொவிட் -19 அவசரகால நிலையை ஜப்பான் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.

பிரதமர் யோஷிஹைட் சுகா, நோய்த்தொற்று வீழ்ச்சியடைந்தாலும், அவை உயர்ந்த நிலையில் இருப்பதாகக் கூறி, , மேலும் சில மருத்துவமனைகள் இன்னும் நெருக்கடியில் உள்தாகக் கூறினார்.

ஒத்திவைக்கப்பட்ட தோக்கியோ 2020 ஒலிம்பிக் தொடங்குவதற்கு ஐந்து வாரங்களுக்கு முன் ஜூன் 19 வரை இந்த கட்டுப்பாடு இருக்கும்.

#TamilSchoolmychoice

உள்ளூர் பார்வையாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கலாமா என்பதை தீர்மானிக்க ஜூன் 20 அன்று அவசரநிலை முடியும் வரை காத்திருப்பதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு பார்வையாளர்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளனர்.

தோக்கியோவில் தினசரி தொற்று வீதம் 100- க்கு கீழே குறைய வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். வியாழக்கிழமை, தலைநகரில் கிட்டத்தட்ட 700 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.