கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (மே 29) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை வரலாற்றிலேயே உச்ச பட்சமாக 9,020 ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 558,534- ஆக உயர்ந்துள்ளது.
மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மாநிலம் மீண்டும் பதிவு செய்தது. 2,836 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அதனை அடுத்து கிளந்தானில் 907 தொற்றுகள் பதிவாயின. அடுத்த நிலையில் 898 தொற்றுகளை நெகிரி செம்பிலான் பதிவு செய்தது.
789 தொற்றுகளை கோலாலம்பூர் பதிவு செய்துள்ளது. ஜோகூரில் 468 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.