Home இந்தியா தமிழ் நாட்டில் பிளஸ்-2 (12-ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு இரத்து

தமிழ் நாட்டில் பிளஸ்-2 (12-ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு இரத்து

645
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாட்டில் பிளஸ்-2 எனப்படும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

தேசிய அளவில் இந்தத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழ் நாட்டிலும் இதுகுறித்த பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று சனிக்கிழமை இரவு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை உயர்நிலை அதிகாரிகளின் கூட்டத்திற்குத் தலைமை வகித்த பின்னர் இன்று சனிக்கிழமை ஊரடங்கு நீட்டிப்பிற்கான உத்தரவை தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்தார்.