Home வணிகம்/தொழில் நுட்பம் அரசாங்கத்தின் சேவைகள் அனைத்தும் 2022-க்குள் ரொக்கப் பரிமாற்றமின்றி நடைபெறும்

அரசாங்கத்தின் சேவைகள் அனைத்தும் 2022-க்குள் ரொக்கப் பரிமாற்றமின்றி நடைபெறும்

824
0
SHARE
Ad

கோலாலம்பூர் : உலகம் எங்கிலும் தற்போது வங்கிப் பரிமாற்றங்களும், பணப் பரிமாற்றங்களும் ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தாமல் இணைய வழியாகவே பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

இதற்கு உதவும் பொருட்டு நமது நாட்டின் நிதியமைச்சும் மைடிஜிடல் (MyDigital) என்ற செயலியை அறிமுகம் செய்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அரசாங்கம் தொடர்பான எல்லாப் பணப் பரிமாற்றங்களும் ரொக்கப் பணமின்றி, இணையப் பரிமாற்றம் மூலமே நடைபெறும் என நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் பரிமாற்றங்கள் பாதுகாப்புடன் நடைபெறும் என்பதுடன் தொடர்புகளும் மேலும் வலுப்படுத்தப்படும். ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கும் இந்த நடைமுறை உதவும் என்றும் தெங்கு சாப்ருல் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இறுதிவரை அரசாங்கத்தின் வசூல்களில் 60 விழுக்காடு இணையம் வழியாகவே வசூலிக்கப்பட்டது என்றும் தெங்கு சாப்ருல் குறிப்பிட்டார்.

இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) மலேசிய கணக்காய்வாளர்களின் கழகத்தின் 2021 மாநாட்டை (Malaysian Institute of Accountants (MIA) தொடக்கி வைத்தபோது தெங்கு சாப்ருல் மேற்கண்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.