Home கலை உலகம் ஹரிஷ் கல்யாண் : மிக அதிகமாக விரும்பப்பட்ட நடிகர்

ஹரிஷ் கல்யாண் : மிக அதிகமாக விரும்பப்பட்ட நடிகர்

773
0
SHARE
Ad

சென்னை : 2020-ஆம் ஆண்டில் மிக அதிகமாக இரசிகர்களால் விரும்பப்பட்ட 30 ஆண் சினிமா நட்சத்திரங்களில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தமிழகத்தின் சென்னை டைம்ஸ் ஊடகம் மக்களால் மிக அதிகமாக விரும்பப்படும் 30 ஆண் சினிமா நட்சத்திரங்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை அண்மையில் நடத்தியது.

அந்தக் கருத்துக் கணிப்பில்தான் ஹரிஷ் கல்யாண் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அவர் ஏற்கனவே சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், அவரால் பிரபல்யத்தை அடைய முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

#TamilSchoolmychoice

அவருக்கு அடுத்து இரண்டாவது நிலையை தமிழிலும் மலையாளத்திலும் பிரபலமான துல்கர் சல்மான்  பெற்றிருக்கிறார். நடிகர் மம்முட்டியின் மகனான இவர், பல படங்களில் நடித்துள்ளார்.

3-வது இடத்தைப் பிடித்திருக்கும் சினிமா பிரபலம், நடிகரல்ல! இசையமைப்பாளர்!

அனிருத் ரவிச்சந்திரன்தான் அவர்! ஹரிஷ், அனிருத் இருவரும் இன்னும் திருமணமாகாதவர்கள். ஆனால் துல்கர் சல்மான் திருமணமானவர்.

இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருப்பவர்கள் பின்வருமாறு:

4. விஷ்ணு விஷால்

5. காளிதாஸ் ஜெயராம்

6. சிவகார்த்திகேயன்

7. தனுஷ்

8. அஸ்வின் குமார் (குக்கு வித் கோமாளி)

9. சிலம்பரசன்

மேற்கண்ட வரிசையைத் தவிர, விஜய்யின் மாஸ்டர், கைதி படங்களில் வில்லன் பாத்திரத்தில் கலக்கிய அர்ஜூன் தாஸ்,  பிக்பாஸ் பிரபலம் பாலாஜி, நடிகர் அதர்வா, துருவ் விக்ரம், கௌதம் கார்த்திக், பிக்பாஸ் பிரபலம் கவின், நடிகர் ஜீவா, அசோக் செல்வன் ஆகியோரும் முதல் 30 இடங்களில் பல்வேறு நிலைகளைக் கைப்பற்றியிருக்கின்றனர்.

30 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் மலேசியரான முகேன் ராவ் 21-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் கடந்த ஆண்டின் பிக்பாஸ் வெற்றியாளருமாவார்.

சாந்தனு பாக்கியராஜ் 26-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி 27-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.