Home நாடு எஸ்பிஎம் 2020 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

எஸ்பிஎம் 2020 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

903
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்தாண்டு நடைபெற வேண்டிய 2020 ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வுகள் கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றன.

அந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வியாழக்கிழமை (ஜூன் 10) வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையம் வழியாகப் பெறுவதற்கும் தெரிந்து கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்று காலை 10.00 மணி முதல் எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.