Home நாடு துன் மகாதீரும் மாமன்னரைச் சந்திக்கிறார்

துன் மகாதீரும் மாமன்னரைச் சந்திக்கிறார்

580
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10)  முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மாமன்னரைச் சந்திக்கிறார். அதற்கான அழைப்புக் கடிதத்தை அவர் அரண்மனையிலிருந்து பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று புதன்கிழமை தொடங்கி வரிசையாக பல அரசியல் தலைவர்களை மாமன்னர் சந்தித்தார்.

முதல் தலைவராக நேற்று காலையில் காலையில் பிரதமர் மொகிதின் யாசினைச் சந்தித்த மாமன்னர், அதன் பிறகு அன்வார் இப்ராகிம், ஜசெகவின் லிம் குவான் எங், அமானா கட்சியின் முகமட் சாபு ஆகியோரையும் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி தலைவர்களை மாமன்னர் சந்திப்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

அவசர காலத்தை நீட்டிப்பதா?

15-வது பொதுத் தேர்தலை நடத்துவதா?

நடப்பு அரசாங்கத்தையே ஆட்சியில் நீடிக்க அனுமதிப்பதா?

அல்லது புதிய ஒற்றுமை அரசாங்கத்தை நிர்மாணிப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதா?

என்ற நான்கு கேள்விகளின் அடிப்படையில் மாமன்னர் அரசியல் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து முக்கிய முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த முடிவுகள் எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் கொண்ட அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.