Home உலகம் ஈரோ 2020 : வேல்ஸ் 1- சுவிட்சர்லாந்து -1

ஈரோ 2020 : வேல்ஸ் 1- சுவிட்சர்லாந்து -1

909
0
SHARE
Ad
வெற்றி வாகை சூடிய சுவிட்சர்லாந்து குழுவினர்

பாக்கு (அசர்பைஜான்) : (குறிப்பிடப்படும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்) ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 12) இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வேல்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய இருநாடுகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.

அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாக்கு நகரிலுள்ள அரங்கில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் டென்மார்க்கும் பின்லாந்தும் மோதுகின்றன. டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம், ரஷியா ஆகிய இருநாடுகளும் களம் காண்கின்றன. ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

எல்லா ஆட்டங்களும் ஆஸ்ட்ரோவில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன.

துருக்கியை வென்ற இத்தாலி

இதற்கிடையில் இன்று அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இத்தாலி தருக்கி இடையிலான முதல் ஆட்டத்திலேயே இத்தாலி 3-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. 3 கோல்களுமே இரண்டாம் பாதி ஆட்டத்தில் அடிக்கப்பட்டன.

இதன் மூலம் தனது வலிமையை நிரூபித்திருக்கும் இத்தாலி, கிண்ணத்தை வெற்றிக் கொள்ளும் வாய்ப்புள்ள குழுக்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இதுவரை 39 ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கும் இத்தாலி மிக அதிகமாக கோல் அடித்த ஆட்டம் இன்றைய ஆட்டமாகும்.

இந்த முறை நடைபெறும் காற்பந்து போட்டிகளில் காணொலி (வீடியோ) மூலம் போட்டி நடுவர் இறுதி முடிவை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.