Home நாடு சரவாக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மாமன்னரைச் சந்தித்தனர்

சரவாக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மாமன்னரைச் சந்தித்தனர்

499
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த சில நாட்களாக அனைத்து கட்சித் தலைவர்களும் மாமன்னர் அக்-சுல்தான் அப்துல்லாவை சந்தித்து வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை (ஜூன் 14) சரவாக் கூட்டணி கட்சியின் (ஜிபிஎஸ்) கூறுக் கட்சிகளின் நான்கு தலைவர்கள் மாமன்னரைச் சந்தித்தனர்.

இந்த சந்திபானது இயங்கலை வாயிலாக விஸ்மா பாபாவில், சரவாக் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

30 நிமிட சந்திப்புக் கூட்டத்தில் யுனைடெட் பூமிபுத்ரா பெசாகா கட்சி (பிபிபி) தலைவர் டத்தோ பாதிங்கி அபாங் ஜோஹரி துன் ஓபென், சரவாக் மக்கள் கட்சி (பிஆர்எஸ்) தலைவர் டான்ஸ்ரீ ஜேம்ஸ் ஜெமுட் மாசிங், சரவாக் யுனைடெட் மக்கள் கட்சி (எஸ்யூபிபி) தலைவர் டாக்டர் சிம் குய் ஹியான் மற்றும் முற்போக்கு ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) தலைவர் தியோங் கிங் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.