Home நாடு மக்களுக்கு பலனில்லை என்றால் அவசரநிலை இருந்து என்ன பயன்?

மக்களுக்கு பலனில்லை என்றால் அவசரநிலை இருந்து என்ன பயன்?

619
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களுக்கு பயனளிக்காவிட்டால் அவசரநிலையை அமல்படுத்துவதில் என்ன பயன் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அசிராப் வாஜ்டி டுசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவசரநிலையைத் தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விவாதிக்கும் சலசலப்பில், மக்களின் நலனுக்காக அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்துவது தற்போதைய அவசர காலத்திற்கு பொருத்தமானது என்று அவர் கூறினார்.

“அம்னோ இளைஞர்களைப் பொறுத்தவரை, அவசரநிலை முடிவதற்கு ஒன்றரை மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களின் நலனுக்காக அவசர கட்டளைச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வது நல்லது:

#TamilSchoolmychoice

“எம் 40 உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களுக்கும் கூடுதல் கட்டணங்கள், சலுகைகள் இன்றி வங்கி கடன் தள்ளுபடி வழங்க அறிவுறுத்துங்கள். ஐ-சினார் 2.0 மற்றும் ஐ-லெஸ்டாரி 2.0 போன்ற திட்டங்களை கொண்டு வாருங்கள்.

“தொற்றுநோய் தாக்கத்தின் போது கடுமையாக உயர்ந்த மக்களின் அடிப்படை தேவைகளின் விலையை கட்டுப்படுத்துங்கள். மக்களுக்கு உதவ முடியாவிட்டால் அவசரகாலத்தின் பயன் என்ன,” என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.