Home நாடு அம்னோ: தலைவருடன் அவசரக் கூட்டம் எதுவுமில்லை!

அம்னோ: தலைவருடன் அவசரக் கூட்டம் எதுவுமில்லை!

519
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் அம்னோ அமைச்சர்கள் இடையே கலந்துரையாடலுக்காக இன்று ஓர் அசாதாரண கூட்டம் அழைக்கப்பட்டுள்ள செய்தியை அம்னோ தலைவர்கள் மறுத்துள்ளனர்.

“இது போலியானது, அத்தகைய கூட்டம் எதுவும் அழைக்கப்படவில்லை,” என்று அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

அம்னோ நிர்வாக செயலாளர் முகமட் சுமாலி ரெடுவானும் இன்று பிற்பகல் மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது இதேபோன்ற பதிலை அளித்தார்.

#TamilSchoolmychoice

“கூட்டம் இல்லை. இது ஒரு வதந்தி,” என்று அவர் கூறினார்.

பிற்பகல் 3 மணிக்கு சாஹிட்டுடன் ஒரு சந்திப்பு நடத்த இஸ்மாயில் அமைச்சர் பதவியில் உள்ள அம்னோ தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பியதாகக் கூறி ஒரு செய்தித்தளம் இன்று செய்தியை வெளியிட்ட பின்னர் மலேசியாகினி அவர்களை தொடர்பு கொண்டது.

பல அமைச்சர்கள், தலைவர்களை தொடர்பு கொண்டதாகவும், அந்தக் கூட்டத்தின் நோக்கம் தங்களுக்குத் தெரியாது என்றும், ஆனால் அது திட்டமிடப்பட்டதை மறுக்கவில்லை என்றும் அந்தக் கட்டுரை கூறியது.