அவருக்கு கோலகங்சார் நாடாளுமன்றத் தொகுதி வழங்கப்படும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் அவருக்கு அத்தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் சுயேட்சையாக போட்டியிடவுள்ளார்.
ஆனால் அவருக்கு மாநில சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் மாநில அளவில் ஆட்சிக் குழு உறுப்பினராகும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டார் என்றும் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்தார்.
தற்போது அம்னோவிற்கு எதிராக கமிலியா இப்ராஹிம் செயல்படுவதால் அவர் அம்னோவின் அனைத்து பதவிகளில் இருந்து விலக்கப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோல கங்சார் நாடாளுமன்றத் தொகுதி அம்னோவின் முன்னாள் மகளிர் பகுதித் தலைவி ரபிடா அஸிஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தற்காத்து வந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.