Home அரசியல் சபா மாநிலத்தில் பல தொகுதிகளில் பல்முனைப் போட்டி – பாதிப்பு தேசிய முன்னணிக்கா? மக்கள் கூட்டணிக்கா?

சபா மாநிலத்தில் பல தொகுதிகளில் பல்முனைப் போட்டி – பாதிப்பு தேசிய முன்னணிக்கா? மக்கள் கூட்டணிக்கா?

631
0
SHARE
Ad

sabahசபா, ஏப்ரல்21- நேற்று நடைபெற்ற 13ஆவது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்  தாக்கல் முடிவடைந்துள்ள வேளையில், சபாவின் பல தொகுதிகளில் பல்முனை போட்டி நிலவுகிறது.

தே.மு., மக்கள் கூட்டணி தங்களின் வேட்பாளர்களை சபா மாநிலத்தில் நிறுத்தியுள்ள வேளையில், உள்ளூர் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளனர்.

இதனால் வாக்குகள் சிதறி போகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த வாக்கு சிதறல் எந்த கட்சிக்கு பாதகமாக விளைவை ஏற்படுத்தும் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

#TamilSchoolmychoice

பல கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறி  தேசிய முன்னணிக்கு எதிரான வாக்குகள் மக்கள் கூட்டணி கட்சிகளுக்கு செல்லாமல் உள்ளூர் கட்சிகளுக்கு பிரிந்து சென்றால் அதனால் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று காத்திருக்கும் மக்கள் கூட்டணிக்கு இது பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால் இத்தகைய பல்முனைப் போட்டி மக்கள் கூட்டணிக்கு சாதகமாகவும் அமையலாம்.

சபா மாநிலம் முழுவதும் தேசிய முன்னணிக்கு எதிரான மனப்போக்கு நிலவுகின்றது. கள்ள அடையாள அட்டை, லகாட் டத்து ஊடுருவல் போன்ற பிரச்சனைகளால் சபா மாநிலத்தின் பெரும்பாலான வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் தேசிய முன்னணிக்கு செல்ல கூடிய வாக்குகள் உள்ளூர் கட்சிகளுக்கு ஆதரவாகப்  பிரிந்தால், அதனால் மக்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.