Home 13வது பொதுத் தேர்தல் பிகேஆர், பாஸ் கட்சி வேட்பாளர்களுக்கிடையே 7 தொகுதிகளில் நேரடி போட்டி

பிகேஆர், பாஸ் கட்சி வேட்பாளர்களுக்கிடையே 7 தொகுதிகளில் நேரடி போட்டி

550
0
SHARE
Ad

PAS-PKR-Joint-symbolகோலாலம்பூர், ஏப்ரல் 21- மக்கள் கூட்டணி ஒற்றுமையாகவும், இணக்கத்துடன் இருக்கிறது என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது பி.கே.ஆர்., பாஸ் கட்சி வேட்பாளர்கள் ஏறத்தாழ 7 தொகுதிகளில்  நேரடியாக போட்டியிடவுள்ளனர் என்ற செய்தியின் வழி  அக்கட்சிகளுக்குள்   பிளவு ஏற்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

இப்பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று அந்த கட்சிகளின் மேலிடத் தலைவர்கள் பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சபாவிலும், மேற்கு மலேசியாவின் சில தொகுதிகளிலும் பாஸ், பி.கே.ஆர். வேட்பாளர்கள் நேரடியாக மோதவுள்ளனர். அந்த வகையில் பினாங்கு சுங்கை ஆச்சே சட்டமன்றத் தொகுதியில் செகு பாட் பட்ருல் இஷாம் ஹகாரியை பி.கே.ஆர்.களம் இறங்கியுள்ளது. அவரை எதிர்த்து பாஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

அதேபோல் கோத்தா டாமன்சாரா சட்டமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம்.தலைவர் டாக்டர் முகமது நசிர் ஆசான் பி.கே.ஆர். சின்னத்தில் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து பாஸ் கட்சி சின்னத்தில் ரிட்வான் இஸ்மாயில் களம் இறங்கியுள்ளார்.

மக்கள் கூட்டணியின் இரண்டு முக்கிய கட்சிகளுக்குள் இவ்வாறு மோதல் வெடித்துள்ளது மக்கள் பார்வையில் மக்கள் கூட்டணியின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதோடு தேசிய முன்னணி அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வதற்கும் வசதியாகப் போய்விடும்.

இதனை உணர்ந்து மக்கள் கூட்டணித் தலைவர்களும் கூடிய விரைவில் சுமுகமான முடிவெடுப்பார்கள் எனத் தெரிகின்றது. வேட்பு மனுக்களை வாபஸ் செய்யும் கால அவகாசத்திற்குள் பிகேஆர், பாஸ் கட்சிகளுக்கு இடையிலான சுமுகமான தீர்வு ஏற்பட்டு அதனால் சில வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.