Home நாடு கொவிட்-19: புதிய தொற்றுகள் 6,045 – அதில் பாதி சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் ஆகிய...

கொவிட்-19: புதிய தொற்றுகள் 6,045 – அதில் பாதி சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் ஆகிய 3 மாநிலங்கள்

1067
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  கிள்ளான் பள்ளத்தாக்கு முழுமையும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வந்திருக்கும் நிலையிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 6 ஆயிரத்தைத் தாண்டி 6,045 ஆக பதிவாகியது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், புதிய தொற்றுகளில் பாதிக்கும் மேற்பட்டவை அருகருகே அமைந்திருக்கும் 3 மாநிலங்களில் பதிவானவை என்பதாகும். அந்த மாநிலங்கள் பின்வருமாறு:

சிலாங்கூர் –                2,262
கோலாலம்பூர் –              616
நெகிரி செம்பிலான் –     531

#TamilSchoolmychoice

மொத்த தொற்றுகள் –   3,409

சிலாங்கூரும் நெகிரியும் ஒரே எல்லைக் கோட்டைக் கொண்ட மாநிலங்கள். கோலாலம்பூரும், சிலாங்கூரும் விளக்கத் தேவையில்லை. இந்த 3 மாநிலங்களில் மட்டும் மொத்த தொற்றுகளில் பாதிக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியிருக்கும் நிலையில் நாடு முழுமையிலும் ஏன் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விகளும் சமூக ஊடகங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 778,652 ஆக உயர்ந்திருக்கிறது.

சிலாங்கூர் 2,262 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் 616 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 531 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.

சரவாக் 365 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.