Home நாடு கைரி ஜமாலுடின் : “18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஆகஸ்ட் 1-க்குள் ஒரு தடுப்பூசி”

கைரி ஜமாலுடின் : “18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஆகஸ்ட் 1-க்குள் ஒரு தடுப்பூசி”

728
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் குறைந்த பட்சம்  ஒரு தடுப்பூசியைச் செலுத்தும் ஒரு மாபெரும் திட்டத்தை கைரி ஜமாலுடின் அறிவித்தார்.

இதன்மூலம் இந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள 6.1 மில்லியன் எண்ணிக்கையிலான 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியைப் பெற்றிருப்பர்.

தற்போது சிலாங்கூரிலும், கோலாலம்பூரிலும் நாளொன்றுக்கு 180 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

நாளடைவில் ஒரு நாளைக்கு 272 ஆயிரம் தடுப்பூசிகளாக இந்த எண்ணிக்கை உயர்த்தப்படுவதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் இலக்கு அடையப்படும் என்றும் கைரி ஜமாலுடின் கூறியிருக்கிறார்.

அதே வேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் இனி, 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் முன்கூட்டியே பதிந்து கொள்ளாமல் நேரடியாகத் தடுப்பூசி மையங்களுக்கு சென்று தங்களுக்கான தடுப்பூசிகளை உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுமையிலும் தடுப்பூசிகளைச் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 16) நள்ளிரவு வரையில் 406,763 தடுப்பூசிகள் நாடு முழுமையிலும் செலுத்தப்பட்டிருக்கின்றன.