Home உலகம் ஒலிம்பிக்ஸ் 2020 தொடங்குகிறது

ஒலிம்பிக்ஸ் 2020 தொடங்குகிறது

802
0
SHARE
Ad

தோக்கியோ : கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகளுக்கு மிக விரிவான ஏற்பாடுகளுடன் ஜப்பான் தயாராகியிருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை ஒலிம்பிக்ஸ் தோக்கியோ 2020 போட்டிகளுக்கான அதிகாரபூர்வ தொடக்க விழா நடைபெறுகிறது.

நமது நாட்டில் ஆஸட்ரோ அலைவரிசைகளில் இந்த தொடக்க நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகிறது.

அதிகாரபூர்வத் தொடக்க விழா இன்றுதான் எனினும் சில நாட்களுக்கு முன்னரே காற்பந்து, கூடைப்பந்து போன்ற குழுப்போட்டிகள் தொடங்கி விட்டன.

#TamilSchoolmychoice

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்றிருக்கும் மலேசியக் குழு மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டது. அதன் பிறகே அவர்கள் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முறை மலேசியக் குழு முதல் தங்கப்பதக்கத்தை வென்று வர வேண்டும் என பிரதமர் மொகிதின் யாசின் அறைகூவல் விடுத்துள்ளார்.

பூப்பந்து, டைவிங் எனப்படும் முக்குளிப்பு, சைக்கிளோட்டம் ஆகிய 3 விளையாட்டுகளில் மலேசிய விளையாட்டாளர்கள் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற நம்பிக்கை கொண்டுள்ளதாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ரிசால் மரிக்கான் நம்பிக்கை கொண்டுள்ளார்.