Home நாடு நாடாளுமன்றம்: அவசர கால சட்டங்கள் ஜூலை 21-இல் இரத்து செய்யப்பட்டு விட்டன!

நாடாளுமன்றம்: அவசர கால சட்டங்கள் ஜூலை 21-இல் இரத்து செய்யப்பட்டு விட்டன!

659
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (ஜூலை 26) காலை 10.00 மணிக்குத் தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தொற்று கண்டிருப்பதால் இன்றையக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை. நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சோர் பின் ஓத்மான், பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரும் அம்னோ தலைவருமான  சாஹிட் ஹாமிடி ஆகியோரே அந்த இருவராவர்.
  • மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தொற்று அபாயம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை.
  • காலை 10.00 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில் கூட்டம் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைச் சாடினர்.
  • லங்காவி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான துன் மகாதீர், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர்.
  • அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பொதுவான கருத்து அவசர கால சட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட வேண்டும் என்பதாக இருந்தது.
  • சுமார் ஒரு மணி நேர விவாதங்களுக்குப் பின்னர் சட்டத் துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் எழுந்து, அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டு விட்டன என்றும் எனவே, அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
  • உடனே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து எப்போது அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டன என வினவினர்.
  • அதற்கு பதிலளித்த தக்கியூடின் ஹாசான் கடந்த ஜூலை 21-ஆம் தேதி அவை இரத்துச் செய்யப்பட்டன என்று தெரிவித்தார். இனி அவசர கால சட்டங்களின் நீட்டிப்பும் இல்லை என தக்கியூடின் மேலும் குறிப்பிட்டார்.
  • இதைத் தொடர்ந்து பிரதமர் எழந்து கொவிட் மீட்சித் திட்டத்திற்கான விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • நாடாளுமன்றம் மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்குக் கூடி அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்படும்.