Home நாடு “நாடாளுமன்றம் இப்போதே கூட வேண்டும் – செப்டம்பரில் அல்ல!” – அம்னோ கோரிக்கை

“நாடாளுமன்றம் இப்போதே கூட வேண்டும் – செப்டம்பரில் அல்ல!” – அம்னோ கோரிக்கை

532
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்றப் பெரும்பான்மையை மொகிதின் யாசின் நிரூபிக்க செப்டம்பர் வரை காத்திருக்க முடியாது, இப்போதே நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என அம்னோ வலியுறுத்தியுள்ளது.

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என அம்னோ தலைவர் அகமட் சாஹிட் இப்ராகிம் நேற்று புதன்கிழமை அறிவித்தார்.

இதே போன்றதொரு கூட்டறிக்கையை எதிர்க்கட்சிகளும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று வெளியிட்டனர்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து அம்னோவும் இதே போன்றதொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இதற்கிடையில் அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கான ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மேலும் கூடுதலான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளனர் எனவும் சாஹிட் நேற்று தெரிவித்திருந்தார்.

இதற்கானப் பட்டியல் மாமன்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் சாஹிட் தெரிவித்தார்.