Home இந்தியா ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : இந்தியாவின் ஆண்கள் குழுவுக்கு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெண்கலம்!

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : இந்தியாவின் ஆண்கள் குழுவுக்கு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெண்கலம்!

527
0
SHARE
Ad

தோக்கியோ : ஒலிம்பிக்சில் அரை இறுதி ஆட்டம் வரை வந்து கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ஆண்கள் ஹாக்கிக் குழு இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியைத் தோற்கடித்தது.

5-4 கோல் எண்ணிக்கையில் இந்தியா ஜெர்மனியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் இந்தியா ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் பதக்கத்தைப் பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து 3-வது இடத்திற்கான வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியக் குழு ஜெர்மனியிடம் இன்று வியாழக்கிழமை காலையில் விளையாடியது.

இந்தியாவின் பெண்கள் ஹாக்கிக் குழுவுக்கும் வெண்கலம் கிடைக்குமா?

இதற்கிடையில், தோக்கியோ ஒலிம்பிக்சில் அரை இறுதி ஆட்டம் வரை வந்த இந்தியாவின் பெண்களுக்கான ஹாக்கிக் குழு நேற்று புதன்கிழமை அர்ஜெண்டினா குழுவிடம் கடுமையான போராட்டத்திற்கிடையில் 2-1 கோல் எண்ணிக்கையில் தோல்வி அடைந்தது.

நாளை வெள்ளிக்கிழமை இந்திய பெண்கள் ஹாக்கிக் குழு வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டனுடன் மோதவிருக்கிறது.

ஆண்கள் குழு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருப்பது போன்று பெண்கள் குழுவும் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைக்குமா என்ற ஆர்வம் இந்திய ஹாக்கி விளையாட்டு இரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.