Home நாடு பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர்களுடன் மொகிதின் 2 மணி நேரம் சந்திப்பு!

பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர்களுடன் மொகிதின் 2 மணி நேரம் சந்திப்பு!

649
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 11) காலையில் மாமன்னருடனான சந்திப்பைத் தொடர்ந்து, மாலையில் பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர்களுடன் 2 மணி நேர சந்திப்பு ஒன்றை பிரதமர் மொகிதின் யாசின் நடத்தியிருக்கிறார்.

புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

காலையில் மாமன்னரைச் சந்தித்ததும், அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய பிரதமர், மாமன்னருடனான சந்திப்பு குறித்த விவரங்களை அமைச்சர்களுக்குத் தெரிவித்தார் என அறியப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரத்திற்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் மாலை 5.00 மணியளவில் தனது அலுவலகத்தில் பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர்களை சந்தித்தார் மொகிதின் யாசின். அந்தச் சந்திப்பு இரவு 7.00 மணி வரை நீண்டது.

இந்தச் சந்திப்பின்போது அம்னோவின் ஆதரவு மீட்பைத் தொடர்ந்து அடுத்த கட்ட வியூகங்கள், நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணித் தலைவர்கள் மொகிதின் கலந்தாலோசித்தார் என நம்பப் படுகிறது.

குறிப்பாக, செப்டம்பர் 6-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்பாக சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்டி தனது பெரும்பான்மையை மொகிதின் நிரூபிக்க வேண்டுமென மாமன்னர் அறிவுறுத்தியதாகவும் சில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.