குறிப்பாக ஜோகூர் மாநிலத்தில் அம்னோ-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் இணைப்பால்தான் மாநில அரசாங்கம் இயங்கி வருகிறது. அந்தக் கூட்டணி மூலம்தான் 2020-இல் ஆளும் பக்காத்தான் ஹாரப்பான் அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் முடிந்தது.
இப்போது அம்னோவுக்கும்- பெரிக்காத்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் ஆட்சி கவிழலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுல்தானுக்கு மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் சட்டப்படி உண்டு. எனினும் மாநில அரசாங்கத்தின் ஆலோசனைப்படியே அவர் முடிவு செய்ய முடியும்.
இதைத் தொடர்ந்து சுல்தானின் எச்சரிக்கைக்கு ஏற்ப அந்த மாநிலத்தின் கட்சிகள் தொடர்ந்து ஒன்றாக ஒரே அரசாங்கமாக இயங்குவார்களா அல்லது மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கத் தயாராவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுல்தானின் எச்சரிக்கையையும் மீறி அம்னோ, பெரிக்காத்தான் நேஷனல் இடையிலான கூட்டணி முறிந்தால் அது, மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு வழிவகுக்கும்.
படங்கள் : நன்றி – ஜோகூர் சுல்தான் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்