Home No FB செல்லியல் காணொலி : தமிழ்ப்பள்ளி 6-ஆம் வகுப்பு கணிதம் தேர்வு வழிகாட்டி (பகுதி 2) –...

செல்லியல் காணொலி : தமிழ்ப்பள்ளி 6-ஆம் வகுப்பு கணிதம் தேர்வு வழிகாட்டி (பகுதி 2) – 2021 மதிப்பீட்டுத் தேர்வு

720
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | கணிதம் தேர்வு வழிகாட்டி (பகுதி 2) | 2021 தமிழ்ப் பள்ளிகளுக்கான 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டுத் தேர்வு | 19 ஆகஸ்ட் 2021
Selliyal Video | Mathematics Guide (Part 2) | 2021 Std 6 Assessment Test for Tamil Schools | 19 August 2021

2021-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வுகள் நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டாலும், தமிழ்ப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்புக்கான மதிப்பீட்டுத் தேர்வுகள் பள்ளிகள் அளவிலேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளில் 6-ஆம் வகுப்பு கணிதம் பாடத்துக்கான தேர்வு வழிகாட்டியாக, தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கில், செல்லியல் யூடியூப் தளத்தில் காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை இந்தக் காணொலிகளின் வரிசையில் முதல் பகுதி பதிவேற்றம் கண்டது. இன்று மேற்கண்ட 2-வது நிறைவுப் பகுதி காணொலி பதிவேற்றம் காண்கிறது.

இந்தக் காணொலியின் வழி கணிதம் பாடத்துக்கான சில வழிகாட்டுதல்களை வழங்குகிறார் திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம்.

வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட யுபிஎஸ்ஆர் கணிதம் வழிகாட்டி நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவரான விக்னேஸ்வரி சாம்பசிவம், நீண்ட காலமாக யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காக மாணவர்களுக்குக் கற்றுத் தந்து வந்திருப்பவராவார்.

6-ஆம் வகுப்பு தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செல்லியல் இணைய ஊடகத்தின் முயற்சியில் வெளியிடப்பட்டிருக்கும், கணிதம் தொடர்பான இந்த 2 காணொலிகளும் பயன்தரும் வகையில் அமையும் என நம்புகிறோம்.