கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரி தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்திருக்கும் வேளையில் அம்னோவின் சார்பில் நாடாளுமன்றத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த அசாலினா ஒத்மான் சைட் பதவி விலகியுள்ளார்.
பல கட்சிகள் இணைந்த ஒத்துழைப்பு தேவை என்ற கண்ணோட்டம் பொதுமக்களிடையே ஏற்பட்டிருப்பது தெளிவாகி இருப்பதால், தனது பதவி விலகலைச் சமர்ப்பித்ததாக அசாலினா கூறினார்.
இதன் மூலம் நாடாளுமன்றத்தை மறு சீரமைப்பு செய்ய முடியும் என்றும் அசாலினா கூறியிருக்கிறார்.
மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில் அசாலினா நாடாளுமன்ற அவையின் முதல் துணைத் தலைவராவார்.
அசாலினா, இஸ்மாயில் சாப்ரி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் அம்னோ சார்பிலான அமைச்சராக இடம் பெறக் கூடும் என்ற ஆரூடங்களும் எழுந்துள்ளன.
அசாலினாவின் வாழ்க்கைக் குறிப்புகளை பின்வரும் வரைபடத்தில் காணலாம்: