Home நாடு அமைச்சரவைப் பட்டியல் : இஸ்மாயில் சாப்ரி மாமன்னரைச் சந்திக்கிறார்

அமைச்சரவைப் பட்டியல் : இஸ்மாயில் சாப்ரி மாமன்னரைச் சந்திக்கிறார்

527
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தான் அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையின் பட்டியலோடு நாளை புதன்கிழமை (ஆகஸ்ட் 25) மாமன்னரைச் சந்திக்கிறார் புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி.

இந்த அமைச்சரவைப் பட்டியலுக்கு மாமன்னர் ஒப்புதல் தந்தால், அமைச்சர்கள் அனைவரும் அடுத்த நாள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வர்.

அதைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையின் முதல் அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

#TamilSchoolmychoice

அடுத்த துணைப் பிரதமர் யார், நிதியமைச்சர் யார் என்பதுடன் சில முக்கிய அமைச்சுகளுக்குப் பொறுப்பேற்கப் போகிறவர்கள் யார் என்ற ஆர்வமும் பொதுமக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

கொவிட் நெருக்கடிகளைக் கையாளப் போகும் சுகாதார அமைச்சர் யார் என்பது அதில் முக்கியக் கேள்வியாகும். நிதியமைச்சராக தெங்கு சாப்ருல் தொடர்வாரா அல்லது மாற்றப்படுவாரா என்பதும் ஆர்வத்துடன் பார்க்கப்படும் மற்றொரு மாற்றமாகும்.