Home நாடு சுகாதார அமைச்சர் : கைரி ஜமாலுடின்

சுகாதார அமைச்சர் : கைரி ஜமாலுடின்

731
0
SHARE
Ad

மொகிதின் யாசின் அமைச்சரவையில் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சராகப் பணியாற்றிய கைரி ஜமாலுடின் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டது முதல் கைரி ஜமாலுடின் சிறந்த முறையில் செயல்பட்டு வந்தார். இதன் காரணமாக இன்று நாட்டின் 18 வயதுக்கும் மேற்பட்ட மக்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

கைரி ஜமாலுடினின் திறமையான செயல்பாடு அவருக்குத் தற்போது சுகாதார அமைச்சர் நியமனத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

முன்னாள் சுகாதார அமைச்சர் அடாம் பாபா, கைரி ஜமாலுடின் முன்பு வகித்தஅறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.