இஸ்மாயில் சாப்ரி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டது முதல் அனைவரின் பார்வைகளும் பதிந்திருந்த நியமனம் யாரை அவர் துணைப் பிரதமராக நியமிக்கப் போகிறார் என்பதுதான்.
பல்வேறு சர்ச்சைகள் நிலவிய வேளையில் இஸ்மாயில் சாப்ரி யாரையுமே துணைப் பிரதமராக நியமிக்கவில்லை. இந்த நிலைமையை பல அரசியல் பார்வையாளர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர்.
அதற்கேற்ப, துணைப் பிரதமராக அவர் யாரையுமே அறிவிக்கவில்லை. மாறாக 4 மூத்த அமைச்சர்களை நியமித்துள்ளார். அமைச்சரவைப் பட்டியலை அறிவிக்கும்போது முதன் முதலில் அவர் கூறிய பெயர் அஸ்மின் அலியின் பெயராகும். மூத்த அமைச்சர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருக்கும் அஸ்மின் அலி மீண்டும் அனைத்துலக, வாணிப, தொழிற்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அஸ்மின் அலி இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவையில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.