Home நாடு சரவணன் மீண்டும் மனித வள அமைச்சர்

சரவணன் மீண்டும் மனித வள அமைச்சர்

763
0
SHARE
Ad

பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மீண்டும் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மொகிதின் யாசின் அமைச்சரவையிலும் மஇகாவின் தேசியத் துணைத் தலைவரான சரவணன் இதே அமைச்சுப் பொறுப்பில் இருந்தார்.

மனித வள அமைச்சராக மிகச் சிறப்பான பணிகளை வழங்கிய சரவணன் பல சிறப்புத் திட்டங்களையும் தனது அமைச்சின் வழி முன்னெடுத்தார். தொழிலாளர் நலன்களுக்கான பல்வேறு திட்டங்களை சோக்சோ மூலமும், அமைச்சின் மற்ற பிரிவுகள் மூலமும் அறிமுகப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

சரவணனின் சிறப்பான செயல்பாடுகள் மீண்டும் அவருக்கு  மனித வள அமைச்சின் அமைச்சுப் பொறுப்பைப் பெற்றுத் தந்திருக்கின்றது.

அதே வேளையில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும், ஒரே மஇகா அமைச்சராகவும் அவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்.