Home நாடு கொவிட்-19; புதிய தொற்றுகள் 22,070 – மரணங்கள் 339 – மரணமடைந்த பின்னர் மருத்துவமனை கொண்டுவரப்பட்டவர்கள்...

கொவிட்-19; புதிய தொற்றுகள் 22,070 – மரணங்கள் 339 – மரணமடைந்த பின்னர் மருத்துவமனை கொண்டுவரப்பட்டவர்கள் 99

3653
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று  ஆகஸ்ட் 27 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 22,070 ஆகப் பதிவாகின.

கொவிட் தொற்றுகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆகப் பதிவாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,662,913 ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் 240 பேர் மருத்துவமனைகளில் மரணமடைந்தனர். மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 99 பேர்.

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 15,550 ஆக உயர்ந்திருக்கிறது.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் புள்ளிவிவரங்களை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 982 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்கள் ரீதியிலான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

சிலாங்கூரில் பதிவான மொத்த தொற்றுகள் 5,920 ஆகும்.

பினாங்கு, கோலாலம்பூர், ஜோகூர், கிளந்தான், ஆகிய மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகின.

கெடா, சரவாக் இரண்டு மாநிலங்களும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.

சபா 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தது.