Home இந்தியா சரவணனுக்கு, கமல்ஹாசன் வாழ்த்து!

சரவணனுக்கு, கமல்ஹாசன் வாழ்த்து!

1023
0
SHARE
Ad

சென்னை :இன்று பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்த புதிய அமைச்சரவையில் மீண்டும் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கீழ்க்காணுமாறு பதிவிட்டுள்ளார்:

“மலேசியாவின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக  மீண்டும் பொறுப்பேற்கும் @Datuksaravanan  அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் முன்னெடுப்புகளால் மலேசியத் தமிழர்களின் வாழ்வு சிறக்கட்டும்.”

#TamilSchoolmychoice

அண்மையில் சமூக ஊடங்களின் வழியாக கமல்ஹாசன், சரவணனுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.