கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்த கொவிட் ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) வரையிலான ஒருநாளில் 20,579 ஆகக் குறைந்தன.
மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைக் கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்:
இன்றைய தொற்றுகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,706,089 ஆக உயர்ந்திருக்கிறது.
சிலாங்கூர் கடந்த சில நாட்களாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்து வந்தது. ஆனால் இன்று 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளை மட்டுமே பதிவு செய்தது. இருப்பினும் மிக அதிகமானத் தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
கெடா, பினாங்கு, பேராக், ஜோகூர், கிளந்தான் ஆகிய 5 மாநிலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின.
கோலாலம்பூர், ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான 680 தொற்றுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறது.
சரவாக், சபா, ஆகிய 2 மாநிலங்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமானத் தொற்றுகளைப் பதிவு செய்தன.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal