Home நாடு கொவிட் 19 : புதிய தொற்றுகள் மீண்டும் 20 ஆயிரத்தைக் கடந்தன

கொவிட் 19 : புதிய தொற்றுகள் மீண்டும் 20 ஆயிரத்தைக் கடந்தன

1253
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை வரையிலான ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 20,897 ஆகப் பதிவாகியது.

நேற்று திங்கட்கிழமை 19,628  ஆக இருந்த ஒருநாள் தொற்றுகள் மீண்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரித்திருக்கின்றன.

மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைக் கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்:

#TamilSchoolmychoice

இன்றைய தொற்றுகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,746,254 ஆக உயர்ந்திருக்கிறது.

சிலாங்கூர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளுடன் மிக அதிகமானத் தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கெடா, பினாங்கு, பேராக், கோலாலம்பூர், ஜோகூர், கிளந்தான் ஆகிய 6 மாநிலங்களில்  ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின.

சபா, சரவாக் மாநிலங்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமானத் தொற்றுகளைப் பதிவு செய்தன.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal