Home நாடு கொவிட்-19; புதிய தொற்றுகள் 18,762 – மரணமடைந்தவர்கள் 278

கொவிட்-19; புதிய தொற்றுகள் 18,762 – மரணமடைந்தவர்கள் 278

3459
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று  செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை நேற்றைய எண்ணிக்கையான 20,897 -இலிருந்து  குறைந்து 18,762ஆகப் பதிவாகின.

கொவிட் தொற்றுகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 278 ஆகப் பதிவாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,765,016 ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 16,942 ஆக உயர்ந்திருக்கிறது.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் புள்ளிவிவரங்களை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1007 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 464 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைக் மேற்காணும் வரைபடத்தில் காணலாம்.

சிலாங்கூர் 3,711 தொற்றுகளுடன் மிக அதிகமானத் தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கெடா, பினாங்கு, ஜோகூர், கிளந்தான் ஆகிய 4 மாநிலங்களில்  ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின.

சபா, சரவாக் மாநிலங்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமானத் தொற்றுகளைப் பதிவு செய்தன.

கோலாலம்பூர் 573 தொற்றுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal