Home நாடு அசாலினா, கட்சித் தாவலை தடை செய்ய, தனிநபர் மசோதா சமர்ப்பிக்கிறார்

அசாலினா, கட்சித் தாவலை தடை செய்ய, தனிநபர் மசோதா சமர்ப்பிக்கிறார்

468
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மையக் காலமாக அதிகரித்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலைத் தடை செய்யவேண்டும் என எல்லாத் தரப்புகளிலும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவையின் முன்னாள் துணைத் தலைவரான அசாலினா ஒத்மான் சைட், தனிநபர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

இந்த மசோதா வெற்றி பெற்று சட்டமானால், அதன் பின்னர் ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கட்சி தாவினால் அந்தத் தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படும்.

#TamilSchoolmychoice

இதன்மூலம், கட்சி மாறும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தன்னை வாக்காளர்கள் முன் நிறுத்தி, மீண்டும் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பும் ஏற்படும். கட்சி மாறும் முடிவை வாக்காளர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதையும் மறு தேர்தல் மூலம் நிரூபிக்க முடியும்.

பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாலினா, தான் தனிநபர் மசோதா சமர்ப்பிக்கவிருப்பதற்கான முன்னறிவிப்பை நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசானிடம் சமர்ப்பித்திருக்கிறார்.

இந்த மசோதாவை நிறைவேற்ற மற்ற கட்சிகளின் நாடாளுமன்ற ஆதரவைப் பெற அவர் சக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.