Home நாடு நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைக் கவிழ்க்கும் போராட்டம் தொடங்கியது

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைக் கவிழ்க்கும் போராட்டம் தொடங்கியது

579
0
SHARE
Ad

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசாராக இருப்பவர் அமினுடின் ஹாருண். பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்.

இவரை மந்திரி பெசார் பதவியிலிருந்து வீழ்த்த பிகேஆர் கட்சியில் உட்கட்சிப் போராட்டம் தொடங்கியிருக்கிறது.

4 பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

லாபு சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அகமட், ஶ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் எம்.இரவி, அம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ராஃபி (Rafie) அப்துல் மாலிக், சுவா சட்டமன்ற உறுப்பினர் மைக்கல் யெக் டியூ சிங் ஆகியோரே அந்த நால்வராவர்.

இஸ்மாயில், ராஃபி இருவரும் நெகிரி மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்களாவர்.

இரவி நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற அவையின் துணைத் தலைவருமாவார்.

36 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தில் பிகேஆர் கட்சி 6 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது.

மந்திரி பெசாரை அகற்றும் முயற்சியில் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தாலும் கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமுக்கானத் தங்களின் ஆதரவையும் இவர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாஹ்மி பாட்சில்

இதுகுறித்து இன்று கருத்துரைத்த பிகேஆர் தொடர்புக் குழுத்தலைவர் பாஹ்மி பாட்சில், மாநிலத்தில் ஆதரவை இழந்தது ஏன் என பிகேஆர் கட்சித் தலைமை மந்திரிபெசாருக்கு விளக்கம் கேட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த வாரம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படும் என்றும் பாஹ்மி பாட்சில் கூறியுள்ளார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal