Home நாடு முஸ்லீம் அல்லாத சமயங்கள் தொடர்பான ஷாரியா சட்டத் திருத்தம் – சபா முதல் மாநிலமாக நிராகரித்தது

முஸ்லீம் அல்லாத சமயங்கள் தொடர்பான ஷாரியா சட்டத் திருத்தம் – சபா முதல் மாநிலமாக நிராகரித்தது

832
0
SHARE
Ad
ஹாஜிஜி நூர்

கோத்தாகினபாலு : முஸ்லீம் அல்லாத சமயங்கள் தங்களின் சமயங்கள் குறித்துப் பிரச்சாரம் செய்ய கட்டுப்படுத்தும் ஷாரியா சட்டத் திருத்தத்துக்கான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்த சட்டத்தை நிராகரிக்கும் முதல் மாநிலமாக சபா முன்வந்துள்ளது.

சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் சபா மாநிலத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் மத நல்லிணக்கம் காரணமாக இந்த ஷாரியா சட்டத்தை நிராகரிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் துறையின் மத விவகாரங்களுக்கான  துணையமைச்சர் அகமட் மார்சுக் ஷாரி, ஷாரியா சட்டங்களை மேலும் வலிமைப்படுத்தும் சட்டத்திருத்தங்கள் அமுலாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

முஸ்லீம் அல்லாத சமயங்களைப் பரப்புவதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களும் அவற்றில் அடங்கும் என அவர் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து முஸ்லீம் அல்லாத சமயங்களின் பிரதிநிதிகள் கடுமையானக் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal